கும்மிடிப்பூண்டி அருகே வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


கும்மிடிப்பூண்டி அருகே வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 17 July 2021 11:15 AM IST (Updated: 17 July 2021 11:15 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்த வடமாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேக சாவாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னஓபுளாபுரம் கிராமத்தில் உள்ள தனியார் பிளைவுட் (மரச்சாமான்கள் தயாரிக்கும்) தொழிற்சாலை உள்ளது. இதில், ஊழியராக வேலை செய்து வந்தவர் ஓடிசா மாநிலத்தை சேர்ந்த சுஜித் பேகரா (வயது 26). இவர் தான் பணிபுரியும் தொழிற்சாலை அருகே வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை திடீரென வீட்டில் உள்ள இரும்பு கம்பியில் கயிற்றால் தூக்கிட்ட நிலையில் அவர் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் சுஜித் பேகராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் நீலகண்டன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் சந்தேக சாவாக வழக்குப்பதிவு செய்து, சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story