கொரோனா ஊரடங்கு தளர்வையொட்டி 2 மாதத்துக்கு பிறகு செயல்பட்ட தேனி வாரச்சந்தை


கொரோனா ஊரடங்கு தளர்வையொட்டி 2 மாதத்துக்கு பிறகு செயல்பட்ட தேனி வாரச்சந்தை
x
தினத்தந்தி 17 July 2021 4:32 PM IST (Updated: 17 July 2021 4:32 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கு தளர்வையொட்டி தேனி வாரச்சந்தை 2 மாதத்துக்கு பிறகு மீண்டும் செயல்பட்டது.


தேனி:
தேனி நகரில் பெரியகுளம் சாலையோரம் வாரச்சந்தை செயல்படுகிறது. தமிழகத்தில் 2-வது பெரிய வாரச்சந்தை என்ற சிறப்பு இதற்கு உண்டு. ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த சந்தை செயல்படும். கொரோனா வைரஸ் 2-வது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியதால் கடந்த மே மாதம் 2-வது வாரத்துக்கு பிறகு வாரச்சந்தை மூடப்பட்டது. இதனால் இதை நம்பி வாழும் 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. 
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதன்படி, 2 மாத இடைவெளிக்கு பிறகு தேனி வாரச்சந்தை நேற்று மீண்டும் செயல்பட்டது. எனினும் குறைவான வியாபாரிகள் மட்டுமே சந்தைக்கு வந்தனர். இதனால், பரபரப்பாக காணப்படும் வாரச்சந்தை வளாகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் கூட்டமும் குறைவாகவே காணப்பட்டது. வாரச்சந்தைக்கு வந்த மக்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டது. தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்டது.
மேலும், வாரச்சந்தை வளாகத்தில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரிக்கப்பட்டது.



Next Story