மாவட்ட செய்திகள்

போளூர் அருகே; பள்ளி மாணவி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 2 பேர் கைது + "||" + Near Polur; Two people arrested for complicity in school kidnapping

போளூர் அருகே; பள்ளி மாணவி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 2 பேர் கைது

போளூர் அருகே; பள்ளி மாணவி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 2 பேர் கைது
போளூர் அருகே பள்ளி மாணவி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
போளூர்

போளூர் அருகே பள்ளி மாணவி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

பள்ளி மாணவி காரில் கடத்தல்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த ஓகூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் சசிகுமார் (வயது 28) திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் 10-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை கடந்த 7-ந்தேதி காரில் கடத்தி சென்று விட்டார். 

இதுகுறித்து மாணவியின் தாயார் போளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து, மாணவியை தேடி வந்தார். 
இந்த நிலையில் அந்த மாணவி மட்டும் தனியாக ஊருக்கு வந்தார். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். 

2 பேர் கைது

சசிகுமார் தன்னை திருமணம் செய்து கொள்வதாக காரில் அழைத்து சென்று தாலி கட்டினார் என்றும் இதற்கு எழுவாம்பாடி கிராமத்தை சேர்ந்த பர்வதம் (40), ஓகூரை சேர்ந்த ஏழுமலை (42) ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் மாணவி கூறினார். 

இந்த வழக்கில் சசிகுமாரை ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் ஏற்கனவே கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

தலைமறைவாக இருந்த பர்வதம், ஏழுமலை ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது ‘போக்சோ’ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மணல் திருடிய 2 பேர் கைது
மணல் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
சங்கரன்கோவில் அருகே புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
3. செல்போன் பறித்த 2 பேர் கைது
செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது
நெல்லையில் புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. வீட்டில் நகை- பணம் திருடிய 2 பேர் கைது
நெல்லை அருகே வீட்டில் நகை, பணம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.