நெல் மூட்ைடகள் நனையாமல் இருக்க நடவடிக்கை-கலெக்டர் பார்வையிட்டு அறிவுரை
சேத்துப்பட்டில் 6 லட்சத்து 24 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார்.
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டில் 6 லட்சத்து 24 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார்.
நெல் கொள்முதல் நிலையம்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு செஞ்சி சாலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு திறந்தவெளி கிடங்கு செயல்பட்டு வருகிறது.
சேத்துப்பட்டு போளூர், வந்தவாசி பகுதி சுற்றுப்புற கிராமங்களில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை இங்கு விற்கின்றனர்.
தற்போது 6 லட்சத்து 24 ஆயிரம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன, இந்த மூட்டைகளை அரவை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த திறந்தவெளி கிடங்கை கலெக்டர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார்.
மேலும் விரைவாக நெல் மூட்டைகளை நெல் அரவை நிலையங்களுக்கு அனுப்பி வைக்குமாறும், நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க சேதமடைந்த தார்ப்பாய்களை மாற்றி நெல் முட்டைகளைப் பாதுகாப்பாக வைக்குமாறும் உத்தரவிட்டார்.
உழவர்சந்தை அமையும் இடம்
பின்னர் அங்கிருந்து சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பின்புறம் காலியாக உள்ள இடத்தினை உழவர் சந்தை அமைப்பதற்காக பார்வையிட்டார்.
ஆய்வின்போது, செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் விஜயராஜ், சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ்உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story