ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
வீரபாண்டி:
ஆடி மாத பிறப்பை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று ஆடி மாத பிறப்பையொட்டி கவுமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். கம்பம் வேணுகோபாலகிருஷ்ணன் கோவில் வளாகத்தில் உள்ள யதுகுல வள்ளி தாயாருக்கு சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கம்பம் கவுமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
கூடலூர் 1-வது வார்டு மந்தையம்மன் கோவிலில் ேநற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை செய்யப்பட்டது. மேலும் மழை வேண்டியும், விவசாய நிலங்களில் நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டியும் கோவில் வளாகத்தில் கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story