திருவண்ணாமலையில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடிய பூ மார்க்கெட்
திருவண்ணாமலையில் பொதுமக்கள் கூட்டமின்றி பூ மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் பொதுமக்கள் கூட்டமின்றி பூ மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.
மழை
திருவண்ணாமலை தேரடி வீதியில் ஜோதி பூ மார்க்கெட் செயல்பட்டு வருகின்றது. இங்கு திருவண்ணாமலை நகரம் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதியில் இருந்து மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் மற்றும் ஒசூர் பகுதியில் இருந்து ரோஜா வகை பூக்களும் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த நிலையில் திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக அவ்வபோது பெய்து வரும் மழையின் காரணமாக மல்லி, முல்லை, கனகாமரம் உள்ளிட்ட பூக்களின் விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதனால் ஜோதி பூ மார்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து அதிகரித்து உள்ளது.
வெறிச்சோடிய பூ மார்க்கெட்
இந்த நிலையில் நேற்று ஆடி மாத பிறப்பு என்பதால் பூக்களின் வியாபாரம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காலை நேரத்தில் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் ஜோதி பூ மார்க்கெட்டில் நேற்று மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் கடந்த வாரங்களில் காட்டிலும் நேற்று மல்லி, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களின் விலை கிலோ ரூ.30 முதல் 50 வரை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
பூக்கள் விற்பனை இன்றி தேக்கம் அடைந்ததால் வியாபாரிகள் விரக்தி அடைந்தனர்.
மேலும் சாலையோர பூ விற்பனை செய்பவர்களும் பொதுமக்கள் வருகைக்காக காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
Related Tags :
Next Story