ஒரு யூனிட் மின்சாரத்தில் 50 கி.மீ. ஓடும் சைக்கிள்


ஒரு யூனிட் மின்சாரத்தில் 50 கி.மீ. ஓடும் சைக்கிள்
x
தினத்தந்தி 17 July 2021 9:57 PM IST (Updated: 17 July 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

ஒரு யூனிட் மின்சாரத்தில் 50 கி.மீ. பயணிக்கும் வகையில் மின்சார சைக்கிளை வடிவமைத்து விழுப்புரத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் அசத்தியுள்ளார்.

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள பக்கமேடு கிராமத்தை சேர்ந்தவர் எஸ்.பாஸ்கரன் (வயது 33). டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ள இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக, அதற்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் சைக்கிளை வடிவமைக்க திட்டமிட்டார். இதற்காக அவர், இரும்பு கடைக்கு சென்று அங்கிருந்த பழைய சைக்கிள் ஒன்றை ரூ.2 ஆயிரத்திற்கு வாங்கி வந்து அதில் மின் மோட்டார், பேட்டரி, கண்ட்ரோலர், பிரேக் கட் ஆபர் என ரூ.18 ஆயிரம் செலவிலான கருவிகளை பொருத்தி மின்சாரத்தில் இயங்கும்படி சைக்கிளை வடிவமைத்துள்ளார். இதற்காக மொத்தம் ரூ.20 ஆயிரம் செலவு செய்ததாக அவர் கூறினார்.

30 கிலோ மீட்டர் வேகத்தில்... 

இதுகுறித்து பாஸ்கரன் மேலும் கூறுகையில், இந்த மின்சார சைக்கிளில் உள்ள பேட்டரியில் ஒருமுறை சார்ஜ் போட்டால் 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். ஒரு முறை சார்ஜ் போடுவதற்கு ஒரு யூனிட் மின்சாரம் தேவைப்படும். இந்த ஒரு யூனிட் மின்சாரத்தில் 50 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். பேட்டரியில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் கவலைப்பட வேண்டியதில்லை. சைக்கிளின் பெடல்களை மிதித்து தொடர்ந்து இயக்கலாம் என்றார். 

Next Story