செக்யூரிட்டி வேலை வழங்கினால் தேர்தல் பணியை புறக்கணிப்போம்
தேர்தலின்போது செக்யூரிட்டி வேலை வழங்கினால் தேர்தல் பணியை புறக்கணிப்போம் என்று முன்னாள் படைவீரர்கள் அறிவித்துள்ளனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட வீரத்தமிழர் முன்னாள் முப்படை ராணுவ வீரர்களின் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் முனுசாமி, பொருளாளர் ஜோசப், துணைத்தலைவர் சுந்தரமூர்த்தி, சட்ட ஆலோசகர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அரசு மூலம் கிடைக்கக்கூடிய சலுகைகள் அலைக்கழிக்கப்பட்டு கிடைப்பதால் அதனை முறையாக வழங்க வேண்டும், விழுப்புரத்தில் உள்ள முன்னாள் படைவீரர்களுக்கான மருத்துவமனையை தரம் உயர்த்தி உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும், முன்னாள் படைவீரர்களுடைய பிள்ளைகளின் வசதிக்காக விழுப்புரம் மாவட்டத்தில் கேந்திர வித்யாலயா பள்ளியை அமைக்க வேண்டும், தேர்தல் பணியில் முன்னாள் படைவீரர்களுக்கு செக்யூரிட்டி பணி வழங்கி இழிவுப்படுத்தாமல் மரியாதையுடன் கூடிய அலுவலர் பணியை வழங்க வேண்டும், அப்பணியை வழங்கும் வரை தேர்தல் பணியை புறக்கணிப்பது, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வின் மூலம் காலிப்பணியிடங்களை நிரப்பிடும்போது வெளிப்படைத்தன்மை இல்லாததால் முன்னாள் படைவீரர் அலுவலகம் மூலமாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட முடிவில் ஒருங்கிணைப்பாளர் ஜான்சன்தேவ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story