உடுமலையில்பொதுமக்கள் அதிகாலையிலேயே வந்துகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
உடுமலையில்பொதுமக்கள் அதிகாலையிலேயே வந்துகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
உடுமலை:
உடுமலையில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்களுக்கு பொதுமக்கள் அதிகாலையிலேயே வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
கொரோனா தடுப்பூசி முகாம்கள்
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அரசு அறிவுறுத்திவருகிறது. இந்த நிலையில் பொதுமக்களின் வசதிக்காக கடந்த ஒரு மாதமாக வாக்குச்சாவடி மையங்களில் (பள்ளிகள்) கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு அலைமோதுகின்றனர். கொரோனா தடுப்பூசி முகாம் தங்கள் பகுதியில் எப்போது நடைபெறும் என்று விசாரித்து எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அந்தந்த பகுதிகளில் தடுப்பூசி போடப்படும் இடங்கள், முகாம் நடப்பதற்கு முதல்நாள் பிற்பகல்தான் உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரியவருகிறது.
அமணலிங்க வீதி
அதன்படி உடுமலை நகராட்சி பகுதியில் நேற்று அமணலிங்க வீதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் தென்னைமரத்து வீதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்தது. இந்த முகாம்களில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பொதுமக்கள் அதிகாலையிலேயே வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதைத்தொடர்ந்து நகராட்சி சுகாதார பணியாளர்கள் அவசர, அவசரமாக அங்கு வந்து பள்ளி வளாகத்தை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்தனர். பிளீச்சிங் பவுடரும் தூவப்பட்டது.
இதைத்தொடர்ந்து காலை 7.30 மணிக்கு பிறகு டோக்கன் கொடுக்கப்பட்டது. மொத்தம் 280 டோக்கன் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு காலை 9 மணியிலிருந்து கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை உடுமலை நகர அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மேற்கொண்டனர். இதேபோன்று நேற்று தென்னைமரத்து வீதி நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடந்த முகாமிலும் 280 பேருக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
Related Tags :
Next Story