மஞ்சள் பயிரில் ஊடுபயிராக சின்னவெங்காயம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்


மஞ்சள் பயிரில் ஊடுபயிராக சின்னவெங்காயம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்
x
தினத்தந்தி 17 July 2021 10:17 PM IST (Updated: 17 July 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலை அடிவார பகுதிகளில் மஞ்சள் பயிரில் ஊடுபயிராக சின்னவெங்காயம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்


மூங்கில்துறைப்பட்டு

சொட்டுநீர் பாசனம்

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. இங்கு ஆண்டு பயிராக கரும்பு, மரவள்ளி, உள்ளிட்ட பயிர்களும், பருவ கால பயிர்களான நெல், கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, உளுந்து உள்ளிட்ட பயிர்களும் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. 
வழக்கம்போல் இந்த ஆண்டும். தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் விவசாயிகள் சொட்டுநீர் பாசன முறையை பின்பற்றி பயிர் சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். 

மரவள்ளி, மஞ்சள்

கல்வராயன் மலை அடிவார பகுதியான மூலக்காடு, ஆனைமடுவு, புளியங்கொட்டை, புதுப்பட்டு, லக்கிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் மரவள்ளி மற்றும் மஞ்சள் பயிர்களை சாகுபடி செய்து இருப்பதை காண முடிகிறது. இந்தபயிர்களுக்கு சொட்டு நீர் பாசன முறையை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதில் மஞ்சள் பயிரில் ஊடுபயிராக சின்ன வெங்காயம் சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மஞ்சள் பயிர் 10 மாதங்களுக்கு மேல் வளரக்கூடியது என்பதால் அதற்கு இணையாக 3 மாதங்களுக்குள் அறுவடை செய்யக் கூடிய சின்ன வெங்காயத்தை பயிரிட்டு பராமரித்து வருகிறோம். இப்பகுதிகளில் சொட்டு நீர் பாசனம் முறைகளுக்கு சரியான வகையில் அரசு மானியம் வழங்கப்படுவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு எங்களுக்கு மானியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Next Story