பல்லடம் அருகே விவசாய தோட்டத்தில் 19 மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டன.

x
தினத்தந்தி 17 July 2021 10:23 PM IST (Updated: 17 July 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே விவசாய தோட்டத்தில் 19 மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டன.

பல்லடம், 
பல்லடம் அருகே விவசாய தோட்டத்தில் 19 மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டன. இதற்கு யார்? காரணம் என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
19 மயில்கள் செத்து கிடந்தன
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி வலசுப்பாளையத்தில் பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் 19 மயில்கள் செத்து கிடப்பதாக வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு திருப்பூர் வனச்சரக அலுவலர் காசிலிங்கம், வனவர் திருமூர்த்தி உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் போலீசார்விரைந்தனர். அப்போது அந்த தோட்டத்தில் 7 ஆண் மயில்கள், 12 பெண் மயில்கள் என 19 மயில்கள் செத்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பல்லடம், ஜூலை.18-

விஷம் வைத்து கொன்றுள்ளனர்
இதையடுத்து அரசு கால்நடை உதவி மருத்துவர் அறிவுசெல்வம் சம்பவ இடத்திற்கு வந்து செத்துக்கிடந்த மயில்களை பிரேத பரிசோதனை செய்தார். பிரேத பரிசோதனையில் 19 மயில்களும் விஷம் வைத்த அரிசியை சாப்பிட்டதால் செத்தது தெரியவந்தது.
 இதையடுத்து மயில்களை விஷம் வைத்து கொன்றது யார்? என்பது  குறித்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் பல்லடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 19 மயில்கள் விஷம் வைத்துக்கொல்லப்பட்ட சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story