போலீசார் விசாரணை


போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 17 July 2021 10:25 PM IST (Updated: 17 July 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி, 
சிவகாசி தேவர்குளத்தை சேர்ந்தவர் இசக்கி (வயது 24). இவர் மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் அடுத்த நாள் காலையில் இருசக்கர வாகனத்தை எடுக்க வரும்போது அந்த வாகனம் மாயமாகி இருந்தது. இதுகுறித்து இசக்கி திருத்தங்கல் போலீசில் புகார் செய்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தை தேடி வருகிறார்கள். மாயமான வாகனத்தின் மதிப்பு ரூ.25 ஆயிரம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story