ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
சங்கராபுரம் பகுதியில் ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடிமாத பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக மாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் சங்கராபுரம் வாசவி அம்மன், முதல் பாலமேடு மாரியம்மன், புற்று மாரியம்மன், தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன், ஏரிக்கரை துர்க்கை அம்மன், மாநாட்டு மாரியம்மன் உள்பட சங்கராபுரம் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாத பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Related Tags :
Next Story