அஞ்செட்டி அருகே 16 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளிக்கு போலீஸ் வலைவீச்சு


அஞ்செட்டி அருகே 16 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளிக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 17 July 2021 10:28 PM IST (Updated: 17 July 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

அஞ்செட்டி அருகே 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தேன்கனிக்கோட்டை:
16 வயது சிறுமி கர்ப்பம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா அஞ்செட்டி அருகே உள்ள வண்ணாத்திப்பட்டியை சேர்ந்தவர் மாதப்பன் (வயது 26). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். இவர் கட்டிட வேலை செய்வதற்காக அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்றார்.
அப்போது அந்த கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதேபோல் பலமுறை அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி கர்ப்பமானார்.
2 மாத கர்ப்பம்
இந்தநிலையில் சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. மேலும் அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவும் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர், அவரை சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இதுதொடர்பாக அவரிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி, தொழிலாளி மாதப்பன் தன்னை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்ததாகவும், அதனால் தான் கர்ப்பமானதாகவும் தெரிவித்தார்.
வலைவீச்சு
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பூரணம் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய மாதப்பனை வலைவீசி தேடி வருகிறார்கள்.
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, 2 மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தேன்கனிக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story