கிருஷ்ணகிரியில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது


கிருஷ்ணகிரியில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில்  மேலும் 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 July 2021 10:28 PM IST (Updated: 17 July 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி:
பண இரட்டிப்பு மோசடி 
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் நாசர் (வயது 38). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காய்கறிகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக ரூ.70 லட்சம் பெற்று கொண்டு சிலர் இவரை ஏமாற்றி விட்டு தப்பி சென்றனர்.
இதுதொடர்பான புகாரின்பேரில், பணம் இரட்டிப்பு செய்ய முயன்றதாக காய்கறி வியாபாரி நாசர் உள்பட 6 பேரை கடந்த 4-ந் தேதி மகராஜகடை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ரூ.70 லட்சத்துடன் தப்பிய நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கருமபாளையம் பகுதியை சேர்ந்த பண்டாரி என்பவரை சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். 
மேலும் 2 பேர் கைது
இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் தங்கம் தெருவை சேர்ந்த அபுபக்கர் சித்திக் (43), புதுக்கோட்டை ஆவுடையார் கோவில் கடவாகோட்டையை சேர்ந்த சோமசுந்தரம் (28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். 
அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story