ஊரடங்கு விதி மீறல்; 12 கடைகளுக்கு அபராதம்


ஊரடங்கு விதி மீறல்; 12 கடைகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 17 July 2021 10:28 PM IST (Updated: 17 July 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு விதி மீறிய 12 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

விழுப்புரம், 

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளின்படி பெரும்பாலான கடைகள் இரவு 9 மணி வரை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அனைத்து கடைகளிலும் கட்டாயம் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் நகரில் உள்ள கடைகளில் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா? என்று நேற்று முன்தினம் இரவு நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் செல்வராஜ், திண்ணாயிரமூர்த்தி, ரமணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

12 கடைகளுக்கு அபராதம் 

அப்போது பேன்சி ஸ்டோர், புகைப்பட ஸ்டுடியோ, துணிக்கடை, பாத்திரக்கடை, மளிகை கடை, கண் கண்ணாடி விற்பனை கடை உள்ளிட்ட 12 கடைகளில் அதன் உரிமையாளர்கள் முக கவசம் அணியாமல் வியாபாரத்தில் ஈடுபட்டதும், பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களும் முக கவசம் அணியாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 12 கடைகளின் உரிமையாளர்களை கண்டித்த நகராட்சி அதிகாரிகள், அந்த கடைகளுக்கு உடனடி அபராதம் விதித்தனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கொரோனா ஊரடங்கு விதியை பின்பற்றாத 12 கடைகளுக்கு தலா ரூ.200 வீதம் ரூ.2,400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும். ஆகவே அரசு விதிமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Next Story