சின்ன தடாகம் செங்கல் சூளைகளில் மீண்டும் உற்பத்தி தொடங்குமா


சின்ன தடாகம் செங்கல் சூளைகளில் மீண்டும் உற்பத்தி தொடங்குமா
x
தினத்தந்தி 17 July 2021 10:33 PM IST (Updated: 17 July 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

சின்ன தடாகம் செங்கல் சூளைகளில் மீண்டும் உற்பத்தி தொடங்குமா

துடியலூர்

கோவை அருகே சின்ன தடாகம் செங்கல் சூளைகளில் மீண்டும் உற்பத்தி தொடங்குமா? தட்டுப்பாட்டால் விலை உயர்ந்தது.

செங்கல் உற்பத்தி நிறுத்தம்

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நடக்கும் கட்டுமான தொழிலுக்கு பெரும்பாலும் சின்னத்தடாகத்தில் செயல்படும் 140-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளிலிருந்தே செங்கல்கள் அனுப்பப்பட்டு வந்தன.

 இந்த நிலையில் உரிய அனுமதியின்றியும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உண்டாகும் வகையிலும் செயல்படுவதாக கூறி அரசு தரப்பில் செங்கல் சூளைகள்இயங்க தடை விதிக்கப்பட்டது. 

இதன்காரணமாக செங்கல் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது.தயாரிக்கப்பட்ட செங்கல்களையும் விற்பனை செய்ய உற்பத்தியாளர்கள் மறுத்து விட்டதால் தற்போது கட்டுமானத் தொழில் பாதிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

விலை உயர்வு

சின்னத்தடாகத்தில் செங்கல் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் ஆலாந்துறை, கோவனூர், வெள்ளியங்காடு பகுதிகளில் செயல்படும் சூளைகளில் இருந்து உற்பத்தியாகும் செங்கல் விலை உயர்ந்துள்ளது.

இதனால் வீடுகட்டுவோர் முன்பு திட்டமிட்டதைவிட கூடுதலாக செலவழிக்கப்பட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில்கோவை மாவட்ட நிர்வாகம் மனது வைத்தால்தான் இப்பிரச்சினை முழுமையாக தீரும் நிலை உருவாகியுள்ளது 

.இதுகுறித்து கோவை மாவட்ட செங்கல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சி.ஆர்.ராமச்சந்திரன் கூறியதாவது

மீட்டெடுக்க வேண்டும்

இந்த பிரச்சினையை மாவட்ட நிர்வாகத்தினால்தான் தீர்க்கமுடியும். அரசின் வழிகாட்டுதலின் படி முழுமையாக விதிகளுக்கு உட்பட்டு மீண்டும் செங்கல் சூளைகளை இயக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

சென்னை உயர்நீதிமன்றமும் கோவை மாவட்ட கலெக்டர் சின்னத்தடாகத்தில் ஆய்வு மேற்கொண்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படத் தகுதியுள்ள சூளைகளைகண்டறிந்து தகுந்த முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. 

ஆனால் அப்பணி  இன்னும் தொடங்கவில்லை. 

ஆகவே கோவை மாவட்ட கலெக்டர் இதுகுறித்து தனிக்கவனம் செலுத்தி செங்கல் உற்பத்தி தொழிலை மீட்டெடுக்க வேண்டும் என்றார்.

 இந்தநிலையில் சின்ன தடாகம் செங்கல் சூளைகளில் மீண்டும் உற்பத்தி தொடங்குமா? என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.


Next Story