தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சொர்ணகாளை. இவரது மகன் பெரியசாமி (வயது21). இவர் டிப்ளமோ மெக்கானிக் முடித்துவிட்டு கோவையில் பணிபுரிந்து வந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கினால் சொந்த ஊரான செட்டிகுறிச்சியிலேயே கிடைத்த வேலையை செய்து வந்துள்ளார். இந்தநிலையில் பெரியசாமி தனது வீட்டின் மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பந்தல்குடிபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி மற்றும் போலீசார் பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story