வளர்ச்சி திட்டப்பணிகளை கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு


வளர்ச்சி திட்டப்பணிகளை கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு
x
தினத்தந்தி 17 July 2021 10:37 PM IST (Updated: 17 July 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் பகுதியில் வளர்ச்சிதிட்டப்பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்

கண்டாச்சிமங்கலம்

மரகன்றுகள் நடும் பணி

தியாகதுருகம் அருகே உள்ள பொரசக்குறிச்சி ஊராட்சியில் 2013-2014-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடப்பட்ட 516 தேக்கு மரங்கள் பராமரிக்கப்பட்டு வருவதை கலெக்டர் ஸ்ரீதர் பார்வையிட்டார்.
பின்னர் அவர் அதே பகுதியில் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 4 ஏக்கர் நிலத்தில் தென்னை, மா, கொய்யா, நாவல், நெல்லி, கொடுக்காப்புளி உள்ளிட்ட 262 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். 

தொகுப்பு வீடுகள்

இதைத் தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பீட்டில் தனிநபர் திறந்த வெளிகிணறு வெட்டும் பணி மற்றும் ரூ.6 லட்சத்து 77ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி ஆகியவற்றை கலெக்டர் ஸ்ரீதர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதேபோல் பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் தொகுப்பு வீடுகள் மற்றும் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளின் கட்டுமான பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

குடிநீர் இணைப்பு

தொடர்ந்து முடியனூர் ஊராட்சிக்குட்பட்ட குரூர் கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகளை ஆய்வுசெய்த கலெக்டர் ஸ்ரீதர் கட்டுமா பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் முருகண்ணன், உதவி திட்ட அலுவலர் (உட்கட்டமைப்பு) சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, செல்வகணேஷ், உதவி பொறியாளர்கள் தமிழ்ச்செல்வன், ஜெயபிரகாஷ், விஜயன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story