அரசு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ள நிலையில் கவுரவமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழ வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா பேசினார்.


அரசு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ள நிலையில் கவுரவமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழ வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா பேசினார்.
x
தினத்தந்தி 17 July 2021 10:39 PM IST (Updated: 17 July 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

அரசு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ள நிலையில் கவுரவமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழ வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா பேசினார்.

அனுப்பர்பாளையம்,
அரசு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ள நிலையில் கவுரவமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழ வேண்டும் என்று திருநங்கைகளுக்கான தொழில்முனைவு ஊக்குவிப்பு முகாமில் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா பேசினார்.
ஊக்குவிப்பு முகாம் 
திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு மற்றும் தொழில்முனைவு ஊக்குவிப்பு முகாம் சிறுபூலுவப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்றது. இதில் சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் அரவிந்த் வரவேற்றார். 
மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா திருநங்கைகளுக்கான அரசு திட்டங்கள் குறித்து பேசினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நாகராஜன், விவின் ஆகியோர் ஆதார் அடையாள அட்டை பெறுதல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா தலைமை தாங்கி பேசியதாவது:-
தாழ்வு மனப்பான்மை வேண்டாம்
சமுதாயத்தில் திருநங்கைகளால் பிரச்சினை ஏற்படும்போது அவர்கள் மீது கோபம் வராமல் இந்த சமுதாயத்தின் மீதுதான் கோபம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் பெற்றோர்களால் நிராகரிக்கப்பட்டு, சமுதாயத்தால் அங்கீகரிக்கப்படாமல் ஒதுக்கபடுவதுதான். நாம் யாராக பிறக்க வேண்டும் என்பதை கடவுள் தான் தீர்மானிக்கிறார். ஆனால் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.
 இது இறைவனின் படைப்பு அவ்வளவு தான். தாழ்வு மனப்பான்மையுடன் இருக்க வேண்டாம். திருநங்கைளுக்கான அங்கீகாரம் கிடைக்க தமிழக அரசு அக்கறையுடன் செயல்படுகிறது. இதன்படி சமூக நலத்துறை மூலம் திருநங்கைகளுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ள நிலையில் கவுரமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழ வேண்டும். 
40 பேருக்கு பணிநியமன ஆணை
தற்போது திருநங்கைகள் அனைத்து அரசு துறைகளிலும் பணியில் உள்ளார்கள். கவுரவமான வாழ்க்கை வாழ நாம் தகுதியுடையவர்கள் என முதலில் நீங்கள் நம்ப வேண்டும். உங்களில் பலர் நன்றாக படித்துள்ளீர்கள். பட்டதாரியாக இருந்தால், சப்-இன்ஸ்பெக்டராக கூட ஆகலாம். எந்த வேலையையும் கடினமாக நினைக்கக்கூடாது. 
இவ்வாறு அவர் பேசினார்.
 இந்த நிகழ்ச்சியில் 125 திருநங்கைகள் கலந்துகொண்டனர். இதில் 40 பேருக்கு 2 பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களில் பணிபுரிய பணிநியமன ஆணையை போலீஸ் கமிஷனர் வனிதா வழங்கினார். முடிவில் மாநகர குற்றம்-போக்குவரத்து போலீஸ் துணை ஆணையர் ரவி நன்றி கூறினார். இதில் மாநகர போலீஸ் உதவி கமிஷனர்கள் வெற்றிவேந்தன், வரதராஜன் உள்பட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

Next Story