முடுக்கன்குளம் கிராமத்தில் துணை மின்நிலையம்


முடுக்கன்குளம் கிராமத்தில் துணை மின்நிலையம்
x
தினத்தந்தி 17 July 2021 10:40 PM IST (Updated: 17 July 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

முடுக்கன்குளம் கிராமத்தில் துணை மின்நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரியாபட்டி, 
முடுக்கன்குளம் கிராமத்தில் துணை மின்நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
மின்வினியோகம்
காரியாபட்டி தாலுகாவில் 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதி முற்றிலும் விவசாயம் நிறைந்த பகுதியாக உள்ளது. தோப்பூர், சத்திரம்புளியங்குளம், அல்லாளப்பேரி, முடுக்கன்குளம், சித்துமூன்றடைப்பு, கிழவனேரி, பாப்பணம், வி.நாங்கூர், கல்லுப்பட்டி, மந்திரிஓடை, மறைக்குளம், தேனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு காரியாபட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
காரியாபட்டிதுணை மின் நிலையத்திலிருந்து அதிக கிராமங்களுக்கு மின்சாரம் கொடுத்து வருவதால் அனைத்து கிராமங்களுக்கும் சீரான மின்சாரம் வழங்க முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். 
துணை மின்நிலையம் 
அதேபோல மாணவர்களும் கல்வி பயில முடியாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே முடுக்கன்குளம் கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என  அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். 
இதையடுத்து 2018-ம் ஆண்டு முடுக்கன்குளம் சந்தை அருகே துணை மின் நிலையம் அமைப்பதற்கு நிலம் வாங்கப்பட்டது. மின்வாரியத்தில் இருந்து முடுக்கன்குளம் கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்தும் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இந்த பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கப்படவில்லை. 
நடவடிக்கை
எனவே  முடுக்கன்குளம் பகுதி விவசாயிகளின் மின்பற்றாக்குறையை போக்க துணைமின் நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story