740 பேருக்கு கொரோனா தடுப்பூசி
740 பேருக்கு கொரோனா தடுப்பூசி
காங்கேயம்,
கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக ஆங்காங்கே முகாம்கள்அமைத்து பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் காங்கேயம் அருகே படியூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த முகாமில் 180 பேருக்கும், முள்ளிபுரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 180 பேருக்கும், பச்சாபாளையம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 180 பேருக்கும், காங்கேயம்-தாராபுரம் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் 200 பேருக்கும் என மொத்தம் 740 பேருக்கு நேற்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த பொதுமக்கள் முக கவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
Related Tags :
Next Story