இரும்பு வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை


இரும்பு வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 17 July 2021 10:46 PM IST (Updated: 17 July 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே இரும்பு வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு, வெள்ளி பொருட்களையும் மர்மநபர்கள் அள்ளி சென்றனர்.

கரூர்
இரும்பு வியாபாரி
கரூர் அருகே உள்ள ஏமூர் பிரிவு கே.கே. நகரைசேர்ந்தவர் தங்கவேல். இவர் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று தங்கவேல் திண்டுக்கல் மாவட்டம் மல்லபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு தங்கவேல் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார்.    பின்னர் அன்று மாலை தங்கவேல் மனைவி பூர்ணம் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பூர்ணம் உள்ளே சென்று பார்த்தார். 
நகை-பணம் கொள்ளை
அப்போது வீட்டினுள் பீரோவில் வைத்திருந்த 2½ பவுன் தங்க காயின். ரூ.1 லட்சம், 100 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். 
பரபரப்பு
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் சேகரிக்கப்பட்டன. இந்த கொள்ளை குறித்து பூர்ணம் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story