திருக்கோவிலூர் அருகே ஏரியில் மூழ்கி மாணவன் சாவு


திருக்கோவிலூர் அருகே ஏரியில் மூழ்கி மாணவன் சாவு
x
தினத்தந்தி 17 July 2021 10:48 PM IST (Updated: 17 July 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே ஏரியில் மூழ்கி மாணவன் சாவு

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள குலதெய்வமங்கலம் கிராமம் அய்யப்பன் நகரை சேர்ந்தவர் மகேந்திரன் மகன் துளசிராஜன்(வயது 9). இவன் அதே ஊரில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை வீட்டைவிட்டு வெளியே சென்ற துளசிராஜன் இரவு வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவனது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை.

இந்த நிலையில் அருகில் உள்ள ஆடுர் கொளப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் துளசிராஜன் பிணமாக மிதந்தான். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த அரகண்டநல்லூர் போலீசார் மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் மாலை ஏரிக்கு குளிக்க  சென்ற துளசிராஜன் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


Next Story