லாலாபேட்டை அருகே புறா பந்தயம்


லாலாபேட்டை அருகே புறா பந்தயம்
x
தினத்தந்தி 17 July 2021 10:53 PM IST (Updated: 17 July 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

லாலாபேட்டை அருகே புறா பந்தயம் நடைபெற்றது.

லாலாபேட்டை
லாலாபேட்டை அருகே பிள்ளபாளையம் பிடாரியம்மன் கோவில் வளாகத்தில் ஆண்டுதோறும் ஆடி 1-ந்தேதி அன்று புறா பந்தயம் நடைபெறுவது வழக்கம். கர்ண புறா, சாதா புறா என 2 பிரிவுகளாக பந்தயம் நடைபெறும். அதேபோல் நேற்று காலை கர்ண புறா பந்தயம் நடைபெற்றது. இதில், பிள்ளப்பாளையம், வல்லம், கள்ளப்பள்ளி, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் ஏராளமான கர்ணல் புறாக்களை கொண்டு வந்து பந்தயத்தில் பறக்க விட்டனர். போட்டியின் நடுவராக திம்மாச்சிபுரத்தை சேர்ந்த காமராஜ் செயல்பட்டார். இதையடுத்து வானத்தில் நீண்ட நேரம் பறந்து கடைசியில் கீழே இறங்கும் புறா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) சாதா புறா பந்தயம் நடக்கிறது.

Next Story