சிறப்பு மருத்துவ முகாம்
சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
தோகைமலை
தோகைமலை வட்டார மருத்துவர் தியாகராஜன் உத்தரவின்படி தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழவெளியூர் ஊராட்சி இடையபட்டி, ரெங்கநாதபுரம் ஆகிய பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் டாக்டர் விேனாதா தலைமையில் மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும் சுகாதார ஆய்வாளர் பொன்னுசாமி தலைமையில் களப்பணியாளர்கள் மேற்கண்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். தற்போது கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினர்.
Related Tags :
Next Story