கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை:
மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மேகதாதுவில் சட்ட விரோதமாக புதிய அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், அதற்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சிம்சன், விவசாய தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு. கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ராயர், மாவட்ட துணை தலைவர் மணி உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்தில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், இத்தகைய முயற்சிக்கு ஆதரவு தந்து துணை போவதாக மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
 இதில் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் சுந்தரலிங்கம் நன்றி கூறினார்.

Next Story