திருப்பத்தூர்,
திருக்கோஷ்டியூர் அருகே பிராமணப்பட்டி கிராமத்தில் பொது மயானத்திற்குச் செல்லும் பாதை தனியார் பெயருக்கு பட்டாமாறுதல் ஆகியுள்ளதால் அவ்விடத்தில் வேலி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் 16-ந்தேதி 70 வயது முதியவர் இறந்தார்.அவரது இறுதி ஊர்வலம் செல்ல வருவாய்த்துறையினர் மாற்றுப்பாதையை காண்பித்தனர். இதை ஏற்றுக்கொள்ளாது பழைய பாதையில் தனியார் நிலத்தின் வழியாகவே சென்றனர். இதனைத் தொடர்ந்து திருக்கோஷ்டியூர் போலீசார் பெயர் தெரிந்த 39 பேர் மீதும் பெயர் தெரியாத 100 பேர் மீதும் தடையை மீறியதாகவும் கொரோனா தொற்று நடத்தை விதிகளை மீறியதாகவும் வழக்குப்பதிவு செய்தனர்.