முள்ளு கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு வழங்க தோட்ட கலைத்துறை திட்டம்


முள்ளு கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு வழங்க தோட்ட கலைத்துறை திட்டம்
x
தினத்தந்தி 17 July 2021 11:29 PM IST (Updated: 17 July 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு வழங்க தோட்டக்கலை துைற நடவடிக்கை திட்டமிட்டுள்ளது. இதனையொட்டி கத்தரி தோட்டங்களை பயிற்சி கலெக்டர் ஆய்வு செய்தார்.

அணைக்கட்டு

இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு வழங்க தோட்டக்கலை துைற நடவடிக்கை திட்டமிட்டுள்ளது. இதனையொட்டி கத்தரி தோட்டங்களை பயிற்சி கலெக்டர் ஆய்வு செய்தார்.

முள்ளு கத்தரிக்காய்

வேலூர் மாவட்டத்தில் விளையக்கூடிய முள்ளு கத்திரிக்காய்க்கு அதிக மவுசு உள்ளது. இலவம்பாடி கத்தரிக்காய் எனப்படும் இந்த கத்தரிக்காய் அணைக்கட்டு தாலுகா இலவம்பாடி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள தார்வழி, குடிசை, மருதவல்லி பாளையம், நாட்டார்மங்கலம், நரசிங்கபுரம், ஈச்சங்காடு, பொய்கை, புதூர், சக்தியமங்கலம், ராமாபுரம், உள்ளிட்ட பகுதியில்  அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. 

ருசி மிகுந்த இந்த கத்திரிக்காய்க்கு தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை சார்பில் விரைவில் புவிசார் குறியீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பயிற்சி கலெக்டர் ஐஸ்வர்யா, இலவம்பாடியை அடுத்த நாட்டார் மங்கலம் பகுதியில் உள்ள கத்தரி தோட்டங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இயற்கை உரம்

அப்போது விவசாயிகள், ‘‘இலவம்பாடி கத்திரிக்காயை சந்தைப்படுத்த போதுமான வசதி இல்லை. நாங்கள் பயிரிடும் கத்திரிக்காயை வெளி மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பும் வகையில் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் மேலும் இயற்கை உரத்தை அரசு தயாரித்து மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதிலளித்த பயிற்சி கலெக்டர் ஐஸ்வர்யா, அரசு கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக தெரிவித்தார். 

இந்த ஆய்வின்போது அணைக்கட்டு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜ்குமார் வேளாண்மை அலுவலர் டேவிட் ராஜ்குமார் சுதாகர் உதவி தோட்டக்கலை அலுவலர் முரளி உள்ளிட்டோர் இருந்தனர்.

Next Story