ஆடு திருடிய 2 பேர் கைது


ஆடு திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 July 2021 11:35 PM IST (Updated: 17 July 2021 11:35 PM IST)
t-max-icont-min-icon

பூவந்தி அருகே ஆடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்புவனம்,

பூவந்தி போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது கலுங்குப்பட்டி கிராமத்தை சேர்ந்த சரவணன் மனைவி பூரணபாக்கியம் (வயது 44).. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று ஆடுகளை தனது வீட்டின் அருகே உள்ள வயல்வெளிப் பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வெள்ளாட்டை திருடி உள்ளனர். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரக்ளை பிடித்து பூவந்தி போலீசில் ஒப்படைத்தனர்.
 இச்சம்பவம் குறித்து பூரணபாக்கியம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்புராஜா (வயது 19) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்து உள்ளனர். திருட பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story