தேவகோட்டை,
தேவகோட்டை அருகே உள்ள தத்தனி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 37) இவர் தேவகோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுரையிலிருந்து தேவகோட்டை பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு ராம்நகரில் உள்ள பஸ் டெப்போவிற்கு பஸ் ஓட்டி சென்றார். அப்போது ராம்நகரில் அடையாளம் தெரியாத 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து திடீரென டிரைவர் பக்கம் உள்ள முன் பக்க கண்ணாடியில் கல்லை வீசி விட்டு தப்பி விட்டனர். இதில் கண்ணாடி உடைந்து டிரைவர் பாலமுருகன் கண்ணில் குத்தியது.இதில் அவர் காயம் அடைந்தார்.இதுகுறித்து தேவகோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.புகாரின் பேரில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குபதிவு செய்து 2 மர்ம நபர்களை தேடி வருகிறார்.