ஆடிமாத பிறப்பையொட்டி கொல்லிமலை சிற்றருவியில் குளித்த சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கைக்கு செல்ல வனத்துறை தடையால் ஏமாற்றம்


ஆடிமாத பிறப்பையொட்டி கொல்லிமலை சிற்றருவியில் குளித்த சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கைக்கு செல்ல வனத்துறை தடையால் ஏமாற்றம்
x
தினத்தந்தி 17 July 2021 11:43 PM IST (Updated: 17 July 2021 11:43 PM IST)
t-max-icont-min-icon

ஆடிமாத பிறப்பையொட்டி கொல்லிமலை சிற்றருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.

சேந்தமங்கலம்:

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. நேற்று ஆடிமாத பிறப்பையொட்டி நாமக்கல் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகாலை முதலே கொல்லிமலைக்கு சென்றனர். அங்குள்ள வளப்பூர் நாட்டில் வரலாற்று புகழ்வாய்ந்த அரப்பளீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அதன்பின்பு அங்குள்ள ஆகாய கங்கை நீர் வீழ்ச்சிக்கு குளிப்பதற்காக சென்றனர். ஆனால் அங்கு செல்ல வனத்துறையினர் தடைவிதித்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இருப்பினும் அரப்பளீஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள சிற்றருவியில் அனைவரும் குளித்து மகிழ்ந்தனர்.

Next Story