சேலம் வந்த 70 பேருக்கு கொரோனா பாதிப்பு
பிற மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 70 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம்,
பிற மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 70 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினத்தை விட குறைந்துள்ளது. அதாவது, நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 168 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 163 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 22 பேரும், சேலம் ஒன்றிய பகுதிகளில் 35 பேரும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 30 பேரும், நகராட்சி பகுதிகளில் 6 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் பிற மாவட்டங்களில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு வந்த 70 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் உள்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்து 865 ஆகஅதிகரித்துள்ளது.
ஒருவர் பலி
ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 190 பேர் குணமடைந்துள்ளதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து 1,762 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலத்தை சேர்ந்த 42 வயதுடைய ஆண் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 1,525 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story