அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 17 July 2021 7:05 PM GMT (Updated: 17 July 2021 7:12 PM GMT)

ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பெரம்பலூர்,

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால், அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று ஆடி மாத பிறப்பையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. 

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.

பெரம்பலூர் பூசாரி தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் காலையில் நடந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் ஆடி தபசு, பவுணர்மி, ஆடிப்பெருக்கு, அமாவாசை ஆகிய நாட்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.

அன்றைய நாட்களில் வேண்டுதல் நிறைவேற வேண்டி விரதமிருந்த பக்தர்கள் அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

Next Story