ஓட்டல் ஊழியரை அடிக்கவில்லை என்று தர்மஸ்தாலா மஞ்சுநாதர் கோவிலில் சத்தியம் செய்ய தயாரா? - தர்ஷனுக்கு, இந்திரஜித் லங்கேஷ் சவால்
ஓட்டல் ஊழியரை அடிக்கவில்லை என்று தர்மஸ்தாலா மஞ்சுநாதர் கோவிலில் சத்தியம் செய்ய தயாரா என்று நடிகர் தர்ஷனுக்கு, இந்திரஜித் லங்கேஷ் சவால் விடுத்து உள்ளார்.
பெங்களூரு:
ஆயிரம் வீடியோ இருந்தாலும்...
நடிகர் தர்ஷன் மைசூருவில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஊழியரை தாக்கியதாக கன்னட திரைப்பட இயக்குனரும், சமூக ஆர்வலருமான இந்திரஜித் லங்கேஷ் பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார். இந்த நிலையில் நடிகர் தர்ஷன் பெயரில் ஒரு பெண் ரூ.25 கோடி வங்கி கடன் பெற முயற்சி செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தர்ஷன் குறித்த ஒரு வீடியோ தன்னிடம் இருப்பதாகவும் இந்திரஜித் லங்கேஷ் கூறி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தர்ஷன், என்னை பற்றி ஆயிரம் வீடியோ இருந்தாலும் இந்திரஜித் வெளியிடட்டும் என்று கூறி இருந்தார். இதுகுறித்து நேற்று பெங்களூருவில் இந்திரஜித் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சத்தியம் செய்ய தயாரா?
தர்ஷன் தொடர்பான வீடியோ என்னிடம் உள்ளது. போலீசார் கேட்டால் அதை நான் கொடுப்பேன். சாமானிய ஓட்டல் ஊழியரை தர்ஷன் தாக்கி உள்ளார். அவருக்கு நியாயம் கிடைக்க போராடுகிறேன். இந்த வழக்கின் விசாரணையை தர்ஷன் திசைதிருப்ப பார்க்கிறார். ஓட்டல் ஊழியரை தாக்கவில்லை என்று தர்மஸ்தாலா மஞ்சுநாதர் கோவிலில் சத்தியம் செய்ய தர்ஷன் தயாராக உள்ளாரா? கன்னட திரையுலகில் உள்ள முக்கிய பிரமுகர்கள் படிக்கவில்லை என்று நான் கூறவில்லை. நான் கூறியதை சிலர் திரித்து கூறி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story