தைரியம் இருந்தால் என்னை பற்றிய ஆடியோவை வெளியிடட்டும் - இந்திரஜித் லங்கேசுக்கு நடிகர் தர்ஷன் சவால்


தைரியம் இருந்தால் என்னை பற்றிய ஆடியோவை வெளியிடட்டும் - இந்திரஜித் லங்கேசுக்கு நடிகர் தர்ஷன் சவால்
x
தினத்தந்தி 18 July 2021 2:33 AM IST (Updated: 18 July 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

தைரியம் இருந்தால் என்னை பற்றிய ஆடியோவை வெளியிடட்டும் என்று இந்திரஜித் லங்கேசுக்கு நடிகர் தர்ஷன் சவால் விட்டுள்ளார்.

மைசூரு:
  
நடிகர் தர்ஷன் பேட்டி

  கன்னட திைரயுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தர்ஷன். இவர் மைசூருவில் உள்ள ஒரு ஓட்டல் ஊழியரை தாக்கியதாக இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து மைசூரு மாவட்டம் டி.நரசிப்புராவில் உள்ள தனது பண்ணை வீட்டில் நடிகர் தர்ஷன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தைரியம் இருந்தால்...

  நான் பேசியிருக்கும் ஆடியோ ஒன்று தன்னிடம் இருப்பதாக இந்திரஜித் லங்கேஷ் தெரிவித்துள்ளார். இந்த சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவருக்கு தைரியம் இருந்தால் நான் பேசியதாக கூறப்படும் ஆடியோவை வெளியிடட்டும். நான் படிப்பறி அற்றவன் என்று இந்திரஜித் லங்கேஷ் கூறியுள்ளார். என்னை பற்றி எத்தனை ஆடியோக்கள் வேண்டுமானாலும் அவர் வெளியிடலாம். என்னை பற்றி ஆயிரம் ஆடியோக்களை வெளியிட்டாலும் அதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன்.

  ரூ.25 லட்சம் மோசடி வழக்கை திசைத்திருப்ப சதி நடக்கிறது. இதனால் இந்திரஜித் லங்கேஷ், ஓட்டல் ஊழியரை நான் தாக்கியதாக கூறி, என்னை மாட்டிவிட சதி செய்கிறார். ஓட்டல் விஷயத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

  இந்திரஜித் லங்கேசுக்கு திறமை இருந்தால் ஒரு படத்தை இயக்கி வெளியிடட்டும். அதைவிடுத்து என் மீது தேவையில்லாத புகாரை தெரிவிக்கக்கூடாது.
  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story