வாஞ்சிநாதன் சிலைக்கு கலெக்டர், அரசியல் கட்சியினர் மரியாதை


வாஞ்சிநாதன் சிலைக்கு கலெக்டர், அரசியல் கட்சியினர் மரியாதை
x
தினத்தந்தி 18 July 2021 3:00 AM IST (Updated: 18 July 2021 3:00 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் வாஞ்சிநாதன் பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு கலெக்டர் மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

செங்கோட்டை:
சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செங்கோட்டை நகராட்சி ஆணையாளா் நித்யா, சுகாதார அலுவலா் வெங்கடேசன், தாசில்தார் ரோசன்பேகம், வாஞ்சிநாதன் தம்பி பேரன் வாஞ்சிகோபாலகிருஷ்ணன் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

செங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள வாஞ்சிநாதன் முழுஉருவ சிலைக்கு கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் செல்லப்பன், ஜெயக்குமார், கடையநல்லூர் நகர செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் பழனிநாடார் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நகர தலைவா் ராமர், மாவட்ட பொதுச்செயலாளா் முத்துசாமி, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவா் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story