காவிரி போராட்ட குழு தலைவர் மாதேகவுடா மரணம்


காவிரி போராட்ட குழு தலைவர் மாதேகவுடா மரணம்
x
தினத்தந்தி 18 July 2021 3:01 AM IST (Updated: 18 July 2021 3:01 AM IST)
t-max-icont-min-icon

காவிரி போராட்ட குழு தலைவர் மாதேகவுடா மரணம் அடைந்தார்.

மண்டியா:

  மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா கே.எம்.தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜி.மாதேகவுடா. அவருக்கு வயது 94. வயது மூப்பு காரணமாக மண்டியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் மரணம் அடைந்தார். காவிரி நதிநீர் போராட்ட குழுவின் தலைவராக மாதேகவுடா இருந்து வந்தார். காவிரி நதிநீர் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

  1980-ம் ஆண்டு முன்னாள் முதல்-மந்திரி குண்டுராவின் மந்திரிசபையில் மாதேகவுடா வனத்துறை மந்திரியாக பதவி வகித்தார். மேலும் 1989 மற்றும் 1991-ம் ஆண்டுகளில் மண்டியா தொகுதி எம்.பி.யாகவும் பதவி வகித்தார். மூத்த அரசியல் தலைவரான மாதேகவுடா, பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி உள்ளார். மாதேகவுடாவின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story