தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 18 July 2021 6:10 PM IST (Updated: 18 July 2021 6:10 PM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

விளாத்திகுளம்:

விளாத்திகுளம்-எட்டயபுரம் சாலையில் உள்ள கே.சுப்பிரமணியபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 65). சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கு சரவணன் என்ற மகனும், 2 மகள்களும் உண்டு.
கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் சரவணன் இறந்து விட்டார். இதனால் கந்தசாமி பல மாதங்களாக மனஅழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று கந்தசாமி தனது வீட்டின் முன்பு உள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் போலீசார் விரைந்து வந்து கந்தசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story