நூல் மில்லில் தீப்பிடித்தது


நூல் மில்லில் தீப்பிடித்தது
x
தினத்தந்தி 18 July 2021 6:11 PM IST (Updated: 18 July 2021 6:11 PM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே தனியார் நூல் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

பல்லடம்
பல்லடம் அருகே தனியார் நூல் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
இந்த விபத்து குறித்து கூறப்படுவதாவது
நூல் மில்லில் தீப்பிடித்தது
பல்லடம் அருகே கேத்தனூர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் மில் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்கு உள்ள கழிவுப்பஞ்சு சேமிப்பு கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி கழிவு பஞ்சுகளில் தீப்பிடித்து எரிந்தது.
பொருட்கள் எரிந்து சேதம்
 இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். அவர்களால் தீயை அணைக்க முடியாததால் பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ்குமார் தலைமையிலான தீயணைப்பு படையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.  
இந்த தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பஞ்சுகள் மற்றும் பொருட்கள் எரிந்து  நாசமானது. இந்த தீ விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-


Next Story