பெரிய வெங்காயம் வருகை
உடுமலைக்கு மராட்டியத்தில் இருந்து வாரத்திற்கு 250 டன் பெரியபல்லாரி வெங்காயம் வருகிறது.
உடுமலை
உடுமலைக்கு மராட்டியத்தில் இருந்து வாரத்திற்கு 250 டன் பெரியபல்லாரி வெங்காயம் வருகிறது.
பெல்லாரி வெங்காயம்
சமையலுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களில்பல்லாரி பெரிய வெங்காயமும் ஒன்றாக உள்ளது. உணவு வகைகள், குழம்பு, பொறியல், ஆம்லெட், போண்டா, வடை, பக்கோடா, பச்சி உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களுக்கு பெரிய வெங்காயம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெரிய வெங்காயம் தமிழ் நாட்டில் விளைச்சல் மிகமிக குறைவு. நமக்கு தேவையான பெரிய வெங்காயம் கர்நாடகா, மராட்டியம் ஆகிய வெளிமாநிலங்களில் இருந்துதான் கொள்முதல் செய்யப்பட்டு கொண்டு வரப்படுகிறது.
உடுமலை ராஜேந்திரா சாலையில் உள்ள நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் பெரிய வெங்காய மொத்த விற்பனை கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு மராட்டியத்தில் இருந்து கனரக லாரிகள் மூலம் வெங்காயம் கொண்டு வரப்படுகிறது.
வாரத்திற்கு 250 டன்
ஒவ்வொரு கனரக லாரியிலும் 25 டன் முதல் 30 டன்வரை கொண்டு வரப்படுகிறது. வாரத்திற்கு 200 டன் முதல் 250 டன் வரை கொண்டு வரப்படுகிறது. சிறு வியாபாரிகள் இங்கிருந்து வாங்கி உடுமலை,
மடத்துக்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சில்லறை விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். நேற்று உடுமலை உழவர் சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் தரத்தை பொறுத்து ரூ.28 முதல்ரூ.30 வரை விற்கப்பட்டது. அடுத்த மாதம் ஆகஸ்டு முதல் 3 மாதங்களுக்கு பெரிய வெங்காயம் சீசன் என்பதால் அப்போது மராட்டியத்தில் இருந்து உடுமலைக்கு வரத்து அதிகமாக இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story