மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது


மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது
x
தினத்தந்தி 18 July 2021 7:01 PM IST (Updated: 18 July 2021 7:01 PM IST)
t-max-icont-min-icon

மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது

பல்லடம்
பல்லடம் அருகே விவசாய தோட்டத்தில் செத்துக் கிடந்த 19 மயில்களை விஷம் வைத்து க்கொன்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர். 
செத்துக்கிடந்த மயில்கள்
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி வலசுப்பாளையம் கிராமத்தில் பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் மயில்கள் செத்துக் கிடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு திருப்பூர் வன சரக அலுவலர் காசிலிங்கம், வனவர் திருமூர்த்தி, உள்ளிட்ட வனத்துறையினர் சென்றனர்.
அப்போது அங்கு  7 ஆண் மயில்கள், 12 பெண் மயில்கள் என மொத்தம் 19 மயில்கள் செத்துக்கிடந்தன. இதையடுத்து அரசு கால்நடை உதவி மருத்துவர் அறிவு செல்வம் சம்பவ இடத்திற்கு வந்து செத்துக்போன மயில்களின் உடல்களை மருத்துவ பரிசோதனை செய்தார். மருத்துவ பரிசோதனையில் விஷம் வைத்த அரிசியை தின்றதால் மயில்கள் செத்துக்கிடப்பது என தெரியவந்தது.
விவசாயி கைது 
 இதையடுத்து தோட்டத்து உரிமையாளர் விவசாயி பழனிச்சாமியை கைது செய்து மயில்கள் செத்துப்போனதற்கான காரணம் குறித்து விசாரணை செய்தனர். விசாரணையில் தென்னந்தோப்பில் வைக்கப்படும் எரு, மற்றும் உரங்களை மயில்கள் சேதப்படுத்தியதாகவும், பலமுறை விரட்டியும் மயில்கள் போகாததால் விஷம் வைத்து அரிசியில் விஷம் வைத்து மயில்களை கொன்றது தெரியவந்தது.
 ஏற்கனவே கடந்த வாரத்தில் முத்தனம்பாளையம் பகுதியில் 35 மயில்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள் தொடர்ந்து மீண்டும் அதே போல் நடைபெற்ற சம்பவத்தால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
Reporter : P. Arjunan  Location : Tirupur - Palladam

Next Story