49 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்


49 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்
x
தினத்தந்தி 18 July 2021 8:42 PM IST (Updated: 18 July 2021 8:42 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில் 49 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவியை காந்திராஜன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சாவித்திரி சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார். 

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, திருமலைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூக நலஅலுவலர் புஷ்பகலா வரவேற்றார். விழாவில் காந்திராஜன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வேடசந்தூர் மற்றும் வடமதுரை ஒன்றியங்களை சேர்ந்த 49 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. திண்டுக்கல் மேற்கு மாவட்ட முன்னாள் துணைச்செயலாளர் ஜீவா, ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் பிரியம் எஸ்.நடராஜன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

முன்னதாக வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடக்க கல்வி அலுவலகத்தை எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.

Next Story