தெலுங்கானாவில் இருந்து ரெயில் மூலம் சின்னசேலத்துக்கு 2600 டன் அரிசி வந்தது
தெலுங்கானாவில் இருந்து ரெயில் மூலம் சின்னசேலத்துக்கு 2600 டன் அரிசி வந்தது
சின்னசேலம்
தெலுங்கானா மாநிலம், நெக்கொண்டா மாவட்டத்தில் இருந்து 42 சரக்கு ரயில் பெட்டிகள் மூலம் 2 ஆயிரத்து 600 டன் எடையுள்ள 52 ஆயிரம் மூட்டை புழுங்கல் அரிசி சின்னசேலம் ரெயில் நிலையத்துக்கு நேற்று வந்து இறங்கியது.
பின்னர் இந்த அரிசி மூட்டைகளை லாரிகளில் ஏற்றி சின்னசேலம் கூகையூர் சாலையில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் இறக்கி வைக்கப்பட்டது. இதை சேமிப்பு கிடங்கு மேலாளர் பிரபு, உதவியாளர் குமார், இந்திய உணவுக் கழக மேலாளர் வெங்கடாசலம், ஒப்பந்ததாரர் தியாகராஜன், சேமிப்பு கிடங்கு துணை மேலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டனர். இந்த அரிசி மூட்டைகள் பொது வினியோக திட்டத்துக்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story