ராமேசுவரத்தில் இன்று மீனவர்கள் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

ராமேசுவரத்தில் இன்று மீனவர்கள் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
x
தினத்தந்தி 18 July 2021 9:57 PM IST (Updated: 18 July 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

மீனவர்களுக்கு எதிராக மத்திய அரசு இயற்ற உள்ள சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் இன்று மீனவர்கள் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

ராமேசுவரம், 
மீனவர்களுக்கு எதிராக மத்திய அரசு இயற்ற உள்ள சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் இன்று மீனவர்கள் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
ராமேசுவரத்தில் நேற்று அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் சேசுராஜா தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் மீனவ சங்கத் தலைவர்கள் தேவதாஸ், எமரிட், சகாயம், தட்சிணாமூர்த்தி, எடிசன் இருதயம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 மத்திய அரசு வருகின்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், சுதந்திரத்தையும் பறிக்கும் வகையில் மீனவர்களுக்கு எதிராக எல்லை தாண்டி செல்லும் மீனவர்களுக்கு அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை, கடல் எல்லையை வரையறுப்பது, மீன்பிடி அனுமதிச்சீட்டு பெறுவதற்கு கட்டணம், மீனவர்கள் பிடித்து வரக்கூடிய மீன்களுக்கு விலை நிர்ணயம் உள்ளிட்ட மீனவர்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.
கண்டனம்
 இதையடுத்து மத்திய அரசை கண்டித்து நாளை (இன்று) ராமேசுவரத்தில் உள்ள அனைத்து விசைப்படகுகளிலும் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து துறைமுக பகுதியில் நின்று மீனவர்கள் ஒன்று சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story