கூடலூர்- ஓவேலி சாலையோரம் தடுப்புகள் அமைப்பு


கூடலூர்- ஓவேலி சாலையோரம் தடுப்புகள் அமைப்பு
x
தினத்தந்தி 18 July 2021 10:48 PM IST (Updated: 18 July 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர்- ஓவேலி சாலையோரம் தடுப்புகள் அமைக்கப்பட்டது.

கூடலூர்

கூடலூரில் இருந்து ஓவேலி பேரூராட்சி பெரியசோலைக்கு தார் சாலை செல்கிறது. இதில் 1-ம் நெம்பர் பாலம் உள்ள பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் பலத்த மழையால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கும் அபாயத்தில் உள்ளது. 

இந்த நிலையில் கூடலூர் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சாலை மிகவும் மோசமடைந்து வாகன விபத்துகள் ஏற்படும் நிலை காணப்படுகிறது. இதனால் மண் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் சாலையோரம் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்று  கடந்த 14-ந் தேதி படத்துடன் ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியிடப்பட்டது.

இதன் எதிரொலியாக சேதமடைந்த சாலையின் கரையோரம் நெடுஞ்சாலை துறையினர் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து இரும்பு தடுப்புகளை வைத்துள்ளனர். 

மேலும் அதில் இரவு நேரத்தில் வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க ஒளி பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்களை ஒட்டி உள்ளனர். நெடுஞ்சாலைத்துறையினர் தற்காலிக நடவடிக்கையை பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

Next Story