சுங்கம் சேரம்பாடி இடையே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்
சுங்கம்-சேரம்பாடி இடையே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பந்தலூர்
பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே உள்ள சுங்கம், சப்பந்தோடு, காரக்கொல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக சேரம்பாடி பஜாருக்கு தான் செல்ல வேண்டும்.
இந்த நிலையில் சுங்கம்-சேரம்பாடி இடையிலான சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அவசர தேவைக்காக செல்பவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மோசமான சாலையின் காரணமாக அடிக்கடி வாகனங்கள் பஞ்சராகி நடுவழியில் நின்றுவிடுகின்றன. இதனால் அவசர தேவைக்கு எந்தவாகனமும் கிராமத்திற்கு வருவதில்லை.
இதன் காரணமாக கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story