மாவட்ட செய்திகள்

71 பேருக்கு கொரோனா தடுப்பூசி + "||" + Corona vaccine

71 பேருக்கு கொரோனா தடுப்பூசி

71 பேருக்கு கொரோனா தடுப்பூசி
திருப்புவனம் பகுதியில் நடந்த முகாமில் 71 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
திருப்புவனம்,

தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டிட தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. திருப்புவனம் யூனியனைச் சேர்ந்த தட்டான்குளம், வயல்சேரி ஆகிய 2 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு கட்டிட தொழிலாளர் சங்க சிவகங்கை மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கோட்டீஸ்வரி முன்னிலை வகித்தார். கொரோனா தடுப்பூசி போடும் பணியில் காரைக்குடி அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். 2 இடங்களிலும் 71 கட்டிட தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. நிகழ்ச்சியில் அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணன், கட்டிட தொழிலாளர் சங்க ஒன்றிய பொருளாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 900 பேருக்கு கொரோனா தடுப்பூசி
அருப்புக்கோட்டையில் 900 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
2. 66 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு
18 வயதிற்கு மேற்பட்டோரில் 66 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
3. ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி- கலெக்டர் சந்திரகலா தகவல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 352 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 21 ஆயிரத்து 243 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று கலெக்டர் சந்திரகலா தெரிவித்து உள்ளார்.
4. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசு
மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியின் தலைவராக சுகந்திவடிவேல், துணைத்தலைவராக எம்.டி.ஜி.கதிர்வேல் இருந்து வருகின்றனர்.
5. மாவட்டத்தில் இதுவரை- 7 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி -கலெக்டர் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறினார்.