சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் சலவைத் தொழிலாளர்கள் அவர்களது தொழிலை செய்வதற்கு ஏதுவாக பிற்படுத்தப்பட்டோர், நலத்துறை மூலம் பித்தளை துணி தேய்ப்பு பெட்டிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மனுதாரர் அல்லது அவரது குடும்பத்தினர் கடந்த 10 ஆண்டுகளில் விலையில்லா துணித்தேய்ப்பு பெட்டி பெற்றிருக்க கூடாது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சலவை தொழில் செய்வதற்கான சான்று, சாதிச்சான்று, வருமான சான்று, இருப்பிடச்சான்று, வயதிற்கான ஆவணம், இரண்டு புகைப்படம், ஆகியவற்றுடன் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன் அடையலாம்.
இத்தகவலை மாவட்டநிர்வாகம் தெரிவித்து உள்ளது.