முள்ளிப்பட்டு கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி


முள்ளிப்பட்டு கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி
x
தினத்தந்தி 18 July 2021 11:31 PM IST (Updated: 18 July 2021 11:31 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக முள்ளிப்பட்டு கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியானார்.

ஆரணி

இடி, மின்னலுடன் பலத்த மழை

ஆரணி நகரிலும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது இதன் காரணமாக 
ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மனைவி ஜெகதாம்பாள் (வயது 92). இவர்களுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். துரைசாமி இறந்துவிட்டதால் ஜெகதாம்பாள் ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆரணி பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி ஆரணி பகுதியில் 74 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.இந்த கனமழை காரணமாக ஜெகதாம்பாளின் வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்தன. அப்போது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அவர் இடிபாட்டில் சிக்கி பரிதாபமாக இறந்துள்ளார்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் முனியாண்டி ஆரணி தாசில்தார் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஜெகதாம்பாளின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என்றும், அரசு வழங்கும் நிவாரண உதவி ஏதும் தேவையில்லை எனக் கூறி அவரது உடலை மகன்கள் மற்றும் உறவினர்களே அடக்கம் செய்தனர்.

Next Story